20 'தேசத்துரோகம்': நாடாளுமன்றில் சஜித்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 September 2020

20 'தேசத்துரோகம்': நாடாளுமன்றில் சஜித்!



இலங்கை போன்றதொரு நாட்டுக்கு பொம்மை ஜனாதிபதியோ பிரதமரோ தேவையில்லையாயினும் மக்கள் உரிமைகளை நசுக்கும் சர்வாதிகாரமும் அவசியமில்லையென தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


20ம் திருத்தச் சட்ட வரைபை ஆராயவென போலிக் குழுவொன்றையும் உருவாக்கிய அரசு அந்தக் குழுவுக்கு என்ன ஆனது என்று கூட விளக்கமளிக்க முடியாமல் இருப்பதாகவும், முழுக்கவும் தனி நபர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டம் தேசத்துரோக முயற்சியெனவும் சஜித் தனதுரையின் போது தெரிவித்தார்.


19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கப் பெற்ற உரிமைகளைப் பாதுகாப்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களதும் கடமையெனவும் சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment