கட்டார் இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 September 2020

கட்டார் இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது



கட்டார் இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் ஒக்டோபர் 5ம் திகதி வரை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 5 வரையான காலப்பகுதியில் தூதரகம் மூடப்பட்டிருப்பதோடு ஊழியர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ஏலவே சவுதி, ஜித்தா தூதரக ஊழியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து தற்சமயம் மூடப்பட்டிருக்கும் தூதரகம் நாளை மறுதினம் (25) மீளத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டார் தூதரக அவசர தொடர்புகளுக்கு: 


No comments:

Post a Comment