60 ரூபாவுக்கு லொறிகளில் தேங்காய் விற்பனை - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 September 2020

60 ரூபாவுக்கு லொறிகளில் தேங்காய் விற்பனை



தேங்காய் விலையுயர்வு குறித்து தேசிய அளவில் பாரிய அதிருப்தி நிலவி வரும் நிலையில் உச்சகட்ட தேங்காய் விலை 70 ரூபாய் எனவும் அதனை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது அரசு.


இந்நிலையில், அமைச்சு வளாகத்தில் லொறிகளில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு கொழும்பு மற்றும் புற நகர்ப்பகுதிகளுக்கான விநியோகம் திட்டமிடப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.


சில இடங்களில் தேங்காய் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment