கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றியிருந்த எம்.வி. நியு டயமன்ட் கப்பல் இலங்கைக் கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்திருந்த நிலையில் தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து கப்பலை ஆழ் கடல் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டு முயற்சியில் இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளதோடு 35 கடல் மைல் தூரத்துக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பிலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து இயங்கியிருந்த அதேவேளை கப்பல் இலங்கைக் கரையிலிருந்து 20 கடல் மைல் வரை கட்டிழந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment