முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக பரவி வரும் தகவலில் உண்மையெதுவுமில்லையென மறுக்கப்பட்டுள்ளது.
சோபித தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட சமூக நீதிக்கான இயக்கத்தில் கரு ஜயசூரிய உறுப்பிராக இருக்கின்ற அதேவேளை, அதன் செயற்பாடு கட்சி அரசியலாக மாறாது என அவ்வியக்கமும் விளக்கமளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்கத் தயார் என கரு ஜயசூரிய தெரிவித்திருந்த நிலையில் வார இறுதி சிங்கள மொழி பத்திரிகையொன்றில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனை கரு ஜயசூரிய மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment