மக்கள் இனி கையில் 'டேப்புடன்' அலைய வேண்டும்: சஜித் - sonakar.com

Post Top Ad

Monday, 28 September 2020

மக்கள் இனி கையில் 'டேப்புடன்' அலைய வேண்டும்: சஜித்

 தேங்காயின் சுற்றளவின் அடிப்படையில் அரசாங்கம் விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில் இனி மக்கள் அளவெடுக்க 'டேப்' ஒன்றும் கொண்டு சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


எதிர்காலத்திலும் மக்கள் இவ்வாறான பல துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ள அவர், விரைவில் ஆட்சியைக் கைப்பற்றி இந்த அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப் போவதாக தெரிவிக்கிறார்.


தேங்காய் விலை நிர்ணயித்தது போன்றே அரசு பல நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாகவும் அதனை மக்கள் எதிர்பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment