நான் அப்படியெதுவும் சொல்லவில்லை: நாமல் மறுப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 28 September 2020

நான் அப்படியெதுவும் சொல்லவில்லை: நாமல் மறுப்பு

 


100 ரூபாய்க்கு தேங்காய் வாங்க முடியாத அளவுக்கு நாட்டில் யாரும் இல்லையென அமைச்சர் நாமல் கூறிதாக சமூக வலைத்தளங்களில் உலவும் செய்தி சோடிக்கப்பட்டது என மறுப்பு வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.


சிங்கள வானொலியொன்றின் பெயரில் நாமலின் படத்துடன் அவர் இவ்வாறு கூறியுள்ளதாக செய்தி படம் ஒன்று பரிமாறப்பட்டு வருகிறது. எனினும், அதனை நாமல் ராஜபக்சவும் அதே போன்று குறித்த வானொலியும் மறுத்துள்ளது.


அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் இவ்வாறான போலி செய்திகள் அதிகமாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


No comments:

Post a Comment