கடந்த அமைச்சரவை நியமனத்தின் போது தனக்கும் ஒரு அமைச்சுப் பதவியை எதிர்பார்த்திருந்த பெரமுனவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 20ம் திருத்தச் சட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தனக்கொரு அமைச்சுப் பதவி தரப்படாவிட்டால் வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
விமல்வீரவன்சவுடன் கடந்த காலங்களில் நெருங்கிப் பணியாற்றி வந்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் இம்முறையாவது தமக்கான மரியாதை கிடைக்கப் பெறாவிட்டால் வாக்கெடுப்பன்று நாடாளுமன்றம் வராமல் வீட்டில் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த அமைச்சரவை நியமனத்தின் போது, விஜேதாச ராஜபக்ச மற்றும் அதாவுல்லாஹ் ஆகியோர் வெளிநடப்பு செய்ய வேண்டி நேர்ந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment