கண்டி: சட்டவிரோத கட்டிடங்கள் பட்டியலெடுப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 26 September 2020

கண்டி: சட்டவிரோத கட்டிடங்கள் பட்டியலெடுப்பு

 



அண்மையில் கண்டியில் ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்து உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து நகர்ப்புறத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அடையாளங்கண்டு பட்டியல் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காலக்கிரமத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதோடு பாதுகாப்புக்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளையும் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கண்டி - அக்குரண உட்பட்ட பிரதேசங்களில் பெருமளவு கட்டிடங்கள் சட்டவிரோதமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment