20ம் திருத்தச் சட்டத்துக்கு 'திருத்தங்கள்' - sonakar.com

Post Top Ad

Saturday 26 September 2020

20ம் திருத்தச் சட்டத்துக்கு 'திருத்தங்கள்'

 



அரசு முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆளுங்கட்சிக்குள் தீவிர ஆலோசனை இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.


இப்பின்னணியில், தகவல் அறியும் உரிமையை அடிப்படை உரிமையாக உள்வாங்குதல் மற்றும் நாடாளுமன்றைக் கலைப்பதற்கான அதிகாரத்தை இரண்டரை வருடங்களாக்குதல் போன்ற முக்கிய யோசனைகள் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதில் மாற்றமில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment