இன்னும் இரண்டு வருடங்களில் அரசியலிலிருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பெரமுன சார்பு செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன.
20ம் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தால் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கான வயதெல்லைக் கட்டுப்பாடு இல்லாது போகும் என்பதோடு மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் அரசியலுக்கு வரப்போவதாகவும் பெருமளவு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏலவே ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆளுமையை மீள நிறுவியுள்ள அதேவேளை, அண்மைக்காலமாக மஹிந்த ராஜபக்சவின் உடல் ஆரோக்கியம் குறித்தும் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் எதிர்வரும் நவம்பரில் அவருக்கு 74 வயது பூர்த்தியடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment