20க்கு எதிராக இதுவரை ஆறு வழக்குகள் - sonakar.com

Post Top Ad

Wednesday 23 September 2020

20க்கு எதிராக இதுவரை ஆறு வழக்குகள்



அரசாங்கம் முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இதுவரை ஆறு வழக்குகள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


ஆறு மனுக்கள் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அதில் சமகி ஜன பல வேகய மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தனின் மனுவும் உள்ளடக்கம்.


தற்போதுள்ள அரசியலமைப்புக்கு முரணான சரத்துக்கள் 20ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இப்பின்னணியில் நாடாளுமன்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சம்பந்தனின் மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment