தேசியப் பட்டியல்: SJBக்கு கூட்டணி கட்சிகள் எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday 8 August 2020

தேசியப் பட்டியல்: SJBக்கு கூட்டணி கட்சிகள் எச்சரிக்கை

https://www.photojoiner.net/image/ZavXWQj0

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகியுள்ளது.


முஸ்லிம் கட்சிகள் தமக்கும் பங்கு கேட்டு வரும் நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் இன்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் திங்களன்று சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, தேசியப்பட்டியல் விவகாரத்தில் சிறுபான்மை கட்சிகள் புறக்கணிக்கப்பட்டால் இக்கட்சிகள் நாடாளுமன்றில் சுயாதீன குழுவாக அமரவுள்ளதாக சமகி ஜன பல வேகய தலைமை எச்சரிக்கப்பட்டுள்ளதாக சோனகர்.கொம்முக்கு தகவல் கிடைத்துள்ளது.


பிறிதாக, தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலிக்கு சஜித் பிரேமதாச நேரடி வாக்குறுதியளித்திருந்த நிலையில் தற்போது தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தை  நீண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment