தோற்றவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை: சஜித் - sonakar.com

Post Top Ad

Saturday 8 August 2020

தோற்றவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை: சஜித்

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய பெற்றிருக்கும் ஏழு தேசியப்பட்டியலை பங்கிடுவது தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. மாலை 6 மணிக்கு மேலும் ஒரு சந்திப்பு ஏற்பாடாகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற எவருக்கும் தேசியப் பட்டியலில் இடம் தரப் போவதில்லையென சஜித் பிரேமதாச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஏழில் மூன்று ஆசனங்களை முஸ்லிம் தரப்பு கோரி வருவதுடன் பிறிதாக தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலிக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment