தேய்ந்து செல்லும் JVP : விஜித + அநுர தெரிவு - sonakar.com

Post Top Ad

Friday, 7 August 2020

தேய்ந்து செல்லும் JVP : விஜித + அநுர தெரிவு

https://www.photojoiner.net/image/y7c77Edv

இலங்கையை அனைத்து பிரஜைகளும் கௌரவமாக வாழும் நாடாகக் கட்டியெழுப்ப வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதோடு, ஊழல் நடவடிக்கைகளை அவ்வப்போது வெளிக் கொணர்ந்து, முக்கிய கால கட்டங்களில் அறிவார்ந்த ரீதியாக கருத்துக்களை முன் வைத்து அரசியல் செய்து வரும் ஜே.வி.பி (தேசிய மக்கள் சக்தி) தொடர்ச்சியாக நாடாளுமன்றில் வலுவிழந்து வருகிறது.


இம்முறை கொழும்பு மாவட்டத்தில் கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க 49,814 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை கம்பஹாவில் விஜித ஹேரத் 37,008 வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலதிகமாக தேசியப் பட்டியல் நியமனம் ஒன்றையும் பெறுவதன் ஊடாக ஜே.வி.பி சார்பில் மூவரே இம்முறை நாடாளுமன்றில் பங்களிக்கவுள்ளனர்.


சுனில் ஹந்துன்னெத்தி கடந்த தேர்தலிலும் தேசியப் பட்டியல் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்த அதேவேளை மிகவும் நேர்மையாக செயற்பட்டிருந்தார். எனினும், இம்முறையும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment