ரஹீம் - முஷர்ரப்: நாடாளுமன்றுக்கு இரு புது முகங்கள்! - sonakar.com

Post Top Ad

Friday, 7 August 2020

ரஹீம் - முஷர்ரப்: நாடாளுமன்றுக்கு இரு புது முகங்கள்!

https://www.photojoiner.net/image/7fMj3BxM

இம்முறை நாடாளுமன்றுக்கு இரு புதிய முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். திகாமடுல்ல மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்ட முஹமட் முஷர்ரப் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீம் ஆகியோரே இவ்விருவரும்.


முஷர்ரப் தனது தொகுதியில் 18,389 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள அதேவேளை அலி சப்ரி ரஹீம் 33,509 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.


இவை தவிரவும், தேசியப் பட்டியல் நியமனங்கள் ஊடாகவும் புதிய முகங்கள் நாடாளுமன்றில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment