தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த இணையத்துக்கு விஜயம் செய்தால் வேறு தளத்துக்கு தானாகவே செல்லும் வகையில் ஹக் செய்யப்பட்டிருந்ததாகவும் தற்போது தேவையான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திர தினத்தன்றும் சில அரச இணையங்கள் இவ்வாறு ஹக் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment