மக்கள் கேள்வி கேட்காத அளவுக்கு தேவையறிந்து சேவை செய்யப் போவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
பதவியேற்ற பின் நாடளாவிய ரீதியில் தான் பயணித்த இடங்களில் எல்லாம் பெரும்பாலும் மக்கள், நிரந்தர வீடு, விவசாய நிலம், பாடசாலை போன்ற தேவைகளையே தன்னிடம் அடிக்கடி கேட்டு வந்ததாகவும் இவற்றை நிறைவு செய்து மக்கள் இனிமேல் கேள்வி கேட்காத வகையில் நடந்து கொள்ளப் போவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஈடுபடப் போவதில்லையென தெரிவித்திருந்த போதிலும் இடையில் அதன் நிமித்தம் பல இடங்களுக்கு ஜனாதிபதி பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment