சிறைச்சாலைக்குள் கஞ்சிபானைக்கு கும்பிடு போடுகிறார்கள்: கமல் - sonakar.com

Post Top Ad

Saturday, 15 August 2020

சிறைச்சாலைக்குள் கஞ்சிபானைக்கு கும்பிடு போடுகிறார்கள்: கமல்

https://www.photojoiner.net/image/KUf0R1nr

சிறைச்சாலைக்குள் பாதாள உலக பேர்வழி கஞ்சிபானை இம்ரானுக்கு அதிகாரியொருவர் கும்பிடு போடும் காணொளியொன்று தனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.


குற்றவாளிகளைக் கூண்டில் அடைத்தால் மாத்திரம் குற்றங்களை ஒழிக்க முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


கஞ்சிபானை இம்ரானுக்கு கைத்தொலைபேசியொன்றை எடுத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த நபரின் தந்தை மற்றும் சகோதரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

சாதாரணமாக ஓரிரு பக்கற் போதைப் பொருள் விற்பனை செய்தமைக்காக சிறையில் அடைக்கப்படும் ஒருவன் அங்கிருந்து வெளி வரும் போது பெரும் வியாபாரியாக வெளிவரும் சூழ்நிலையே தற்போது நிலவுவதாகவும் நாட்டின் போதைப் பொருள் வர்த்தகம் சிறைச்சாலைகளிலிருந்தே வழி நடாத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment