அரசியல் பழிவாங்கல்: மாத்தளை மேயர் குமுறல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 29 August 2020

அரசியல் பழிவாங்கல்: மாத்தளை மேயர் குமுறல்!


மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகம், அரசியல் பழிவாங்கல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறார் மாத்தளை இடை நிறுத்தப்பட்டுள்ள மாத்தளை மேயர் தல்ஜித் அலுவிஹார.


ஆளுனர் அதிக பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னை இடைநிறுத்தியது தெளிவான அரசியல் பழிவாங்கல் எனவும் இதற்கெதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்தளையிலேயே வெற்றி பெற்றிருந்ததனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தன்னைப் பழிவாங்கியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment