சுதந்திரக் கட்சியை தனிக்குழுவாக இயங்க 'பிக்குகள்' அறிவுரை - sonakar.com

Post Top Ad

Wednesday 19 August 2020

சுதந்திரக் கட்சியை தனிக்குழுவாக இயங்க 'பிக்குகள்' அறிவுரை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயாதீன குழுவாக இயங்க வேண்டும் என அக்கட்சி சார்பு துறவிகள் அறிவுரை வழங்கியுள்ளதாக கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.


பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்ற போதிலும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சுப் பதவிகளில் போதிய பங்க கிடைக்கவில்லையெனவும் குறைபாடு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாலோசனை குறித்து அடுத்த மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும் என சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சிறுபான்மை சமூக கட்சிகளின் உதவியுடனேயே ஆளுங்கட்சியினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment