வாக்கு எண்ணிக்கை: மேலதிக பாதுகாப்பு ஏற்பாடு! - sonakar.com

Post Top Ad

Monday, 3 August 2020

வாக்கு எண்ணிக்கை: மேலதிக பாதுகாப்பு ஏற்பாடு!


கொரோனா சூழ்நிலையில் இம்முறை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வழமைக்கு மாறாக மறு நாளே வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அரசியல் கட்சிகளுக்கு ஒளிவு மறைவற்ற வகையில் நடைமுறைகளை கண்காணிக்க அனுமதிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.

இப்பின்னணியில், வாக்குச் சீட்டுகளை தேர்தல் தினம் இரவு பெரிய பெட்டிகளுக்கு மாற்றி சீல் வைப்பதோடு, இரவு நேரத்தில் அங்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இருவரை தங்கியிருந்து கண்காணிக்கவும் அனுமதிக்கவுள்ளதாகவும், மறு நாள் வாக்கு எண்ணிக்கையின் போது நேரடியாக பார்வையிடும் வரையில் ஏற்பாடு செய்திருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கிறார்.

தேர்தல் அதிகாரிகளுக்கு மேலதிகமாக பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற அதேவேளை வாக்கு எண்ணும் இடங்களுக்கு தீப்பெட்டி, சிகரட், மது பானம் உட்பட ஏனைய போதைப் பொருட்களுடன் வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment