ரஞ்சன் - பொன்சேகா உள்ளே: சுஜீவ - ஹிருனிகா வெளியே! - sonakar.com

Post Top Ad

Friday, 7 August 2020

ரஞ்சன் - பொன்சேகா உள்ளே: சுஜீவ - ஹிருனிகா வெளியே!

https://www.photojoiner.net/image/y05ZMYzQ


2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியைத் தழுவியுள்ள அதேவேளை சமகி ஜன பல வேகயவும் சில பிரபலங்களை இழந்துள்ளது.


கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை சுஜீவ சேனசிங்க மற்றும் ஹிருனிகா தோல்வியைத் தழுவியுள்ளனர்.


ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் மொத்தமாகவே நாடளாவிய ரீதியில் 249, 435 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை சஜித் பிரேமதாச கொழும்பில் 305,744 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment