ராஜித - ரூமிக்கு எதிரான குற்றப் பத்திரிகை கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 28 August 2020

ராஜித - ரூமிக்கு எதிரான குற்றப் பத்திரிகை கையளிப்பு

கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை செய்தியாளர் சந்திப்பில் வைத்து அறிமுகப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் ரூமி ஆகியாருக்கு எதிரான குற்றபத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாத இறுதியில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளே கையளிக்கப்பட்டுள்ள அதேவேளை இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.


ராஜிதவை இவ்விடயத்தில் பிணையில் விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபர் தரப்பு மீளவும் விசாரணை கோரியிருந்த நிலையில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment