கொழும்பில் 6 பில்லியன் செலவில் புதிய மேம்பாலங்கள் - sonakar.com

Post Top Ad

Friday, 28 August 2020

கொழும்பில் 6 பில்லியன் செலவில் புதிய மேம்பாலங்கள்

கொழும்பில் 6 பில்லியன் ரூபா செலவில் புதிதாக மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


நாளொன்றுக்கு நூறு தடவைகளுக்கு மேல் ரயில் பாதுகாப்பு கதவுகள் மூடித் திறப்பதாகவும் சுமார் 4 மணி நேரத்துக்கு அதிகமான நேரம் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்குவதாகவும் தெரிவிக்கின்ற அவர், இதற்குத் தீர்வாக புதிய மேம்பாலங்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.


உத்தரானந்த மாவத்தை மற்றும் ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை பகுதிகளில் மேம்பாலங்கள் அவசியப்படுவதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment