முஸ்லிம்களுக்கு எதிராக தமிழரைத் தூண்டும் பெரமுன! (video) - sonakar.com

Post Top Ad

Saturday, 11 July 2020

முஸ்லிம்களுக்கு எதிராக தமிழரைத் தூண்டும் பெரமுன! (video)


வன்னியில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களைத் தூண்டும் இனவாத செயற்பாட்டை முடுக்கி விட்டுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவின் நேரடி வேண்டுகோளின் பேரில் வன்னி மாவட்டத்துக்கு பொறுப்பாக வந்துள்ளதாக தெரவிக்கும் 'தேசமான்ய' பட்டம் பெற்ற சிங்கள அரசியல்வாதியான ஜனக்க நந்தகுமாரவே இந்நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளார்.

அவர் கலந்து கொண்ட கூட்டமொன்றில் வன்னியில் 70 வீதம் வாழும் தமிழர்களை சிறுபான்மையான முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருப்பதாகவும் அந்த நிலை மாற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதோடு முஸ்லிம் அரசியல்வாதிகளின் மனைவியர் பற்றியும் வர்ணித்துப் பேசியுள்ளார். முஸ்லிம்களிடம் அரசியல் அதிகாரம் இருப்பதால் சிங்கள - தமிழ் மக்கள் துன்பப்படுவதாகவும் அதனை மாற்றவே தாம் வந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காணொளியைக் கீழ்க் காணலாம்:

No comments:

Post a Comment