பெரமுன பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்காக, தேவையேற்படின் ஐக்கிய தேசியக் கட்சியோடும் தமது தரப்பு கை கோர்க்கும் என்கிறார் நிமல் லன்சா.
இரண்டாகப் பிளவுற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பலவீனமடைந்திருப்பதாகவும் அதில் ஒரு பகுதியினர் பெரமுனவுடன் கை கோர்க்கத் தயாராகவே இருப்பதாகவும் லன்சா மேலும் தெரிவித்துள்ளார்.
ஜா எலயில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், பல இடங்களில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவுக்கு வாக்களிக்காதமை குறித்தும் கிராமிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கவலை வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment