அனைத்து தொற்று நோய் பரிசோதனைகளிலிருந்தும் PHIக்கள் விலகல் - sonakar.com

Post Top Ad

Saturday 18 July 2020

அனைத்து தொற்று நோய் பரிசோதனைகளிலிருந்தும் PHIக்கள் விலகல்


அனைத்து வகையான தொற்று நோய்கள் பரிசோதனை நடவடிக்கைகளிலிருந்து பொது சுகாதார பரிசோதகர்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தமது பணிகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் முறையாக வழங்கப்படும் வரை இப் பகிஷ்கரிப்பு தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment