எனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்: கார்டினல் - sonakar.com

Post Top Ad

Saturday, 18 July 2020

எனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்: கார்டினல்


தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.

தன்னை சந்திக்க வரும் போது ஞாபகத்துக்காக எடுத்துச் சென்ற புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது சிலர் பயன்படுத்துவதாகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான சூழ்நிலையில் கார்டினல் மல்கம் ரஞ்சித் பலராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment