இராஜாங்கன பகுதியில் மேலும் நால்வர்: பல குடும்பங்களுக்கு PCR - sonakar.com

Post Top Ad

Sunday 12 July 2020

இராஜாங்கன பகுதியில் மேலும் நால்வர்: பல குடும்பங்களுக்கு PCR


அநுராதபுர, இராஜாங்கன பகுதியில் ஒரு குழந்தை உட்பட மேலும் நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 2515 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மரண வீடொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் அப்பகுதியில் சுமார் 150 குடும்பங்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை இது வெலிசர கடற்படை முகாம் சூழ்நிலைக்கு ஒப்பானது என விளக்கமளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment