வீரவில சிறைச்சாலையிலிருந்து 27 பேர் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Sunday 12 July 2020

வீரவில சிறைச்சாலையிலிருந்து 27 பேர் தனிமைப்படுத்தல்


வீரவில சிறைச்சாலையிலிருந்து 15 அதிகாரிகள் மற்றும் 12 கைதிகள் உட்பட 27 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிகட, புனானை, கந்தகாடு போன்ற முகாம்களிலிருந்து கைதிகளை அழைத்து வரும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் குறித்த இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதிகளே இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்குள்ளான நபருக்கு சுதுவெல்ல பகுதியிலிருந்து வந்தவர்களே காரணம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment