மஹிந்தானந்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை: ICC - sonakar.com

Post Top Ad

Friday 3 July 2020

மஹிந்தானந்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை: ICC


2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதியாட்டத்தை இலங்கை அணி பணத்தைப் பெற்றுக்கொண்டு விற்பனை செய்து விட்டதாக புரளியைக் கிளப்பியிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே சர்வதேச கிரிக்கட் கவுன்சிலுக்குத் தாம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததாக தெரிவித்திருந்தார்.

எனினும், அவ்வாறு ஒரு கடிதமும் ஐ.சி.சிக்கு வரவில்லையென இன்று சர்வதேச கிரிக்கட் கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன் குறித்த ஆட்டம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலுக்கு எதுவித சந்தேகமும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தானந்தவின் புரளியை நம்பி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையும் தற்போது கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment