சாட்சியம் இல்லாததால் இனி விசாரணை இல்லை: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Friday 3 July 2020

சாட்சியம் இல்லாததால் இனி விசாரணை இல்லை: பொலிஸ்


2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதியாட்டம் சூதாடப்பட்டு விட்டதாக 9 வருடங்கள் கழித்து பொதுத் தேர்தல் காலத்தில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் ஆரம்பமான விசாரணைகளை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது பொலிஸ்.

இதுவரை முன்னாள் தலைவர் சங்கக்கார, தெரிவாளர் அரவிந்த டி சில்வா மற்றும் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க ஆகியோர் விசாரிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று மஹேலவை அழைத்து விட்டு விசாரணையைக் கைவிட தீர்மானித்துள்ளது பொலிஸ். மேலதிகமாக விசாரணையைத் தொடரும் அளவுக்கு எதுவித தகவலும், சாட்சியங்களும் கிடைக்கப்பெறவில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மஹேல விசாரணைக்கு வர முடியாது என தெரிவித்ததாக அத தெரண போலி செய்தி வெளியிட்டதன் பின்னணியில் விசாரணை இல்லாத போதிலும் மஹேல அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment