ஐக்கிய தேசியக் கட்சியை பிரித்தது மைத்ரி: ரவி குற்றச்சாட்டு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 July 2020

ஐக்கிய தேசியக் கட்சியை பிரித்தது மைத்ரி: ரவி குற்றச்சாட்டு!


ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்குக் காரணம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என குற்றஞ்சாட்டியுள்ளார் அக்கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க.

2018 ஒக்டோபரில் அவர் மேற்கொண்ட முயற்சி அப்போது வெற்றியளிக்கவில்லையாயினும் அப்போதைய ஆட்சிக் கவிழ்ப்பும் ரணில் அல்லாத வேறு நபருக்கு பிரதமர் பதவியை வழங்குவதன் ஊடாக கட்சியைப் பிரிப்பதற்கான முயற்சியும் அங்கிருந்து தொடர்ந்ததாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இரண்டாவது தடவை மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க ஐக்கிய தேசியக் கட்சி உதவப் போவதில்லையென்பதை அறிந்ததிலிருந்தே அவர் முதுகில் குத்த ஆரம்பித்ததாகவும் ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment