உலக சந்தையில் மசகு எண்ணை விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் அதனை இலங்கையில் 12 மாதங்களுக்குக் குறைக்கப் போவதில்லையென அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தினால் மக்கள் மீது மேலதிக சுமை திணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
எரிபொருள் விலையைக் குறைத்தால், அதனூடாக பொருளாதாரம், ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் சேமிப்பும் வளர்ச்சியடையும் என தெரிவிக்கும் அவர், அரசு இவையனைத்தையும் முடக்கியிருப்பதன் ஊடாக தமது பலவீனத்தை வெளிக்காட்டியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு முன்னேற வேண்டும் என்றால் புத்தியுள்ளவர்கள் நாட்டை ஆள வேண்டும் எனவும் சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment