தீவிரவாதிகளுக்கு 'மத' அடையாளம் தேவையில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Saturday, 25 July 2020

தீவிரவாதிகளுக்கு 'மத' அடையாளம் தேவையில்லை: ரணில்


அனைத்து சமயங்களைப் பின்பற்றுவோரிலும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களை தீவிரவாதிகளைப் பார்க்க வேண்டுமே தவிர அவர்களின் மதத்தை அடையாளப்படுத்த வேண்டிய அவசியமில்லையென்கிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இந்நாட்டின் பிரஜைகள் அனைவரையும் இலங்கையராகவே அடையாளப்படுத்த வேண்டும் என்பது தமது கட்சியின் ஸ்தாபகரான டி.எஸ் சேனாநாயக்கவினதும் எண்ணப்பாடு என தெரிவித்த அவர், அனைத்து இனங்களுக்குள்ளும் தீவிர போக்குடையவர்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால், கொரோனா சூழ்நிலையில் வேலையிழந்தவர்களுக்கு மாதம் 10,000 ரூபா வீதம் ஒரு வருடத்திற்கு சலுகைக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment