வசிம் தாஜுதீன் வழக்கு: சந்தேக நபர் இறந்து விட்டதாக நீதிமன்றில் தகவல் - sonakar.com

Post Top Ad

Thursday, 16 July 2020

வசிம் தாஜுதீன் வழக்கு: சந்தேக நபர் இறந்து விட்டதாக நீதிமன்றில் தகவல்


ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீன் கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் மற்றைய நபர் கடும் சுகயீனமுற்றிருப்பதாகவும் இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதானி பேராசிரியர் ஆனந்த சமரசேகரவே இறந்து விட்டதாகவும் , சிறைப்படுத்தப்பட்டிருந்த டி.ஐ.ஜி அநுர சேனாநாயக்க கடும் சுகயீனமுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருவருமே குறித்த கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment