அங்குலான பொலிசார் - பொது மக்கள் மோதல்: 13 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 16 July 2020

அங்குலான பொலிசார் - பொது மக்கள் மோதல்: 13 பேர் கைது!


அங்குலான பொலிசார் - பொது மக்கள் இடையே இடம்பெற்ற முறுகலின் பின்னணியில் அங்கு மூன்று பெண்கள் உள்ளடங்கலாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அப்பகுதியின் மீனவர் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், நீதிமன்றுக்குச் செல்லவிருந்த சாட்சிகளை பொலிசார் வலுக்கட்டாயமாக காலையிலேயே ஜீப்பில் ஏற்றிச் சென்றதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பின்னணியில் பொலிஸ் நிலையம் மீது கல் வீச்சு இடம்பெற்றுள்ளதுடன் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகையும் பிரயோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment