'தேசிய பிறப்புச் சான்றிதழ்' விரைவில் அறிமுகம் - sonakar.com

Post Top Ad

Thursday, 23 July 2020

demo-image

'தேசிய பிறப்புச் சான்றிதழ்' விரைவில் அறிமுகம்

8jNIFVJ

இலங்கை பிறப்புப் பதிவுகள் இனி தேசிய பிறப்புச் சான்றிதழ் என்ற பெயரிலேயே வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலம் பிறப்புப் பதிவுப் புத்தகத்தின் பிரதியே வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி வரும் காலங்களில் அது தேசிய பிறப்புச் சான்றிதழ் என அறியப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னைய சான்றிதழில் இருந்த தாய் - தந்தை விவாகமானவர்களா? என்ற கேள்வி நீக்கப்பட்டுள்ளதுடன் இனத்தைக் குறிக்கும் பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. எனினும், தாய் - தந்தையரின் இனம் குறிப்பிடப்படவுள்ளதுடன் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நேரத்திலேயே அடையாள இலக்கமும் வழங்கப்படவுள்ளதுடன் ஆவணப்படுத்தல் இலத்திரனியல் மயப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment