இப்போதே வந்தால் 'கவனிப்பு' : சஜித் அறைகூவல்! - sonakar.com

Post Top Ad

Friday 17 July 2020

இப்போதே வந்தால் 'கவனிப்பு' : சஜித் அறைகூவல்!


தமது கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியென நம்பிக்கை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச, வெற்றிக்காக உழைப்போருக்கே முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கிறார்.

இப்பின்னணியில் தேர்தல் முடிந்த பின் தம்மோடு இணைந்து கொள்ளவிருக்கும் அரசியல்வாதிகள் இப்போதே இணைந்து கொண்டால் தான் நல்லமுறையில் கவனிக்க முடியும் எனவும் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், உடனடியாக தமது கரங்களைப் பலப்படுத்த இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி வாக்கு வங்கியே பிளவுறும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அது தமது அணிக்கு வெற்றியை ஈட்டித் தரும் என சமகி ஜன பலவேகய தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment