ஹோமாகமயில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு: பெண்ணிடம் விசாரணை! - sonakar.com

Post Top Ad

Thursday 2 July 2020

ஹோமாகமயில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு: பெண்ணிடம் விசாரணை!


ஹோமாகம பகுதி வீடொன்றில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பெருமளவு ஆயுதங்களைக் கைப்பற்றியிருந்த பொலிசார் அங்கு வாழ்ந்த பெண்ணிடம் பல மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளனர்.

கைக்குண்டுகள், துப்பாக்கி மற்றும் ரவைகள், சீருடைகள் அடங்கலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தது. எனினும், 2013ம் ஆண்டு குறித்த வீட்டைக் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் பெண் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதேசத்தின் பாதாள உலக பேர்வழி பொட்ட கபிலவினால் வர்த்தக கட்டிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்ததன் பின்னணியில் இவையும் பாதாள உலக பேர்வழிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 

No comments:

Post a Comment