வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யத் தடை - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 July 2020

வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யத் தடை


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களோ அவர்களது உறவினர்களோ வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

18 அம்ச விசேட தேர்தல் நிபந்தனைகளை இன்று பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதிலேயே குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வேட்பாளர் சார்பாக வேறு மூவர் இவ்வாறு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலேயே அனுமதியுள்ளதாகவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு பொதுக் கூட்டங்கள் எதையும் நடாத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment