மாடியிலிருந்து 'வீழ்ந்து' கைதி மரணம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 14 July 2020

மாடியிலிருந்து 'வீழ்ந்து' கைதி மரணம்!


கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிமித்தம் நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த கைதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எட்டாவது மாடியில் சிறைச்சாலை காவலர்களின் கண்காணிப்பில் இருந்த குறித்த நபர் கீழ்த் தளத்தில் வீழ்ந்து காணப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெறுகிறது.

ஹெரோயின் வழக்கொன்றின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நீர்கொழும்பைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment