சம்பத் வங்கிக் கணக்குகளை மூடுமாறு நாங்கள் கூறவில்லை: ACJU - sonakar.com

Post Top Ad

Monday 6 July 2020

சம்பத் வங்கிக் கணக்குகளை மூடுமாறு நாங்கள் கூறவில்லை: ACJU

https://www.photojoiner.net/image/Yvj6ZEUx

கடந்த வாரம் தெஹிவல பகுதியில் உள்ள சம்பத் வங்கிக் கிளையொன்றில் இடம் பெற்ற விவகாரம் தொடர்பில் ஜம்இய்யா தனது மனவருத்தத்தை தெரிவிக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இணைந்து சுமூகமாக தீர்த்துக் கொள்வது சிறந்தது. 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பத் வங்கிக் கணக்குகளை இரத்துச் செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது எனும் தலைப்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றது. 

முஸ்லிம்களின் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நாட்டில் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்குமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்பில் ஆங்காங்கே செய்திகள் வெளிவரும் போது அவற்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் www.acju.lk எனும் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக உறுதி செய்துக் கொள்ளுமாறும் நாட்டு மக்களிடம் ஜம்இய்யா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

 
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

No comments:

Post a Comment