திருமண வைபவங்களில் இனி 300 பேர் கலந்து கொள்ளலாம் - sonakar.com

Post Top Ad

Monday, 6 July 2020

திருமண வைபவங்களில் இனி 300 பேர் கலந்து கொள்ளலாம்


திருமண வைபவங்களில் இனி 300 பேர் வரை கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழ்நிலையில் பல்வேறு சமூகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 300 பேர் அல்லது திருமண மண்டபமொன்றின் கொள்ளளவில் 50 வீதமானோர் கலந்து கொள்ள முடியும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் சமூக இடைவெளியைப் பேணுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment