சிறைச்சாலைகளிலிருந்து 1102 கைத்தொலைபேசிகள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday 4 July 2020

சிறைச்சாலைகளிலிருந்து 1102 கைத்தொலைபேசிகள் மீட்பு


கடந்த நான்கு வாரங்களில் சிறைச்சாலைகளிலிருந்து 1102 கைத்தொலைபேசிகள், 688 சிம் கார்டுகள், 283 சார்ஜர்கள் மற்றும் 1300 பற்றரிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் பெருமளவு பொருட்கள் கடத்தப்படுவதுடன் நாட்டில் இடம்பெறும் போதைப் பொருள் கடத்தல்கள் அங்கிருந்தே வழிநடாத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த நான்கு வாரங்களாக இடம்பெற்று வரும் திடீர் சோதனைகளிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment