சிறுவர்களை ஆயுதமேந்த வைத்ததையும் விசாரியுங்கள்: UNHRC - sonakar.com

Post Top Ad

Friday, 26 June 2020

சிறுவர்களை ஆயுதமேந்த வைத்ததையும் விசாரியுங்கள்: UNHRC


கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பழைய குற்றங்கள் விசாரிக்கப்படும் நிலையில் சிறுவர்களை ஆயுதமேந்த வைத்து வலுக்கட்டாயமாக தமது இயக்கத்தில் சேர்த்துக் கொண்டது குறித்தும் அவரிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில்.

பெருமளவு சிறுவர்களை இவ்வாறு கருணா தமது படைகளில் வலுக்கட்டாயமாக சேர்த்துக் கொண்டமை சர்வதேச சட்டவிதிகளுக்கமைவாக பாரிய குற்றம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏழு மணி நேர சி.ஐ.டி விசாரணைக்கு முகங்கொடுத்த கருணா, தாம் இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து கூறவில்லையென விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photo: Ashraf A Samad

No comments:

Post a Comment