பொலிஸ் SI வீட்டில் புதைக்கப்பட்டிருந்த பெருந்தொகை பணம் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 29 June 2020

பொலிஸ் SI வீட்டில் புதைக்கப்பட்டிருந்த பெருந்தொகை பணம் மீட்பு!


போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 31,145,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டிருந்த போதைப் பொருளை மீண்டும் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐந்து பொலிசார் குறித்து விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபரின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமக்குள் பிரித்துக் கொள்வதற்காக இவ்வாறு பணத்தைப் புதைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இந்த ஐவருள் ஒரு ஏ.எஸ்.பி, இரு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment