தேர்தலுக்கு மறு நாளே வாக்கு எண்ணும் நடவடிக்கை: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Sunday, 21 June 2020

தேர்தலுக்கு மறு நாளே வாக்கு எண்ணும் நடவடிக்கை: தேசப்பிரிய


இம்முறை பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கான நேரத்தை நீடிப்பது தொடர்பில்  எதிர்வரும் 25ம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய, எவ்வாறாயினும் தேர்தல் இடம்பெறும் 5ம் திகதி வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கிறார்.

இரு தினங்கள் தேர்தலை நடாத்துவது தொடர்பிலும் முன்னர் கருத்து வெளியிடப்பட்டுள்ள நிலையில் 5ம் திகதி வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாக்களிப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகள் தொடர்பில் நாளைய தினம் வர்த்தமானி ஒன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment