8 மாத காலமாக வெள்ளை வேன் வரவில்லை: மஸ்தான் புகழாரம்! - sonakar.com

Post Top Ad

Sunday 21 June 2020

8 மாத காலமாக வெள்ளை வேன் வரவில்லை: மஸ்தான் புகழாரம்!


கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ, தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு சிறுபான்மை சமூகத்தில் அதிக வாக்குகள் கிடைத்த இடம் வன்னி தேர்தல் தொகுதியாக உள்ளது. தேர்தல் காலப்பகுதியில் தமிழ் கட்சிகள் பலர் கோட்டபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், வெள்ளை வேன் வரும் என பல பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர். ஆனாலும் இந்த 8 மாத காலப்பகுதியில் அவ்வாறு எதுவுமில்லாத சிறப்பான ஒரு ஆட்சியை ஜனாதிபதி நடத்தியுள்ளார்.

தொடர்சியாக மக்களின் வாக்குகளை பெருவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை கடந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்தனர். தற்போதும் தெரிவிக்கின்றனர் எனவும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூரிய கட்டைகாட்டு மாதர் அமைப்பினருடன், சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் கடந்த அரசாங்கம் இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால், மக்களில் அதிகமானோர் ”கொரோனா’ வந்து இறந்திருப்பார்கள். கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் அவ்வாறான நிலைமையை தடுத்துள்ளது.

மேலும் இந்த தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுடன் ஆட்சி அமையும் சந்தர்ப்பம் உள்ளது. எனவே கடந்த தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

-நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment